தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, தலைமைச் செயலகம் சென்றார். அங்கு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி
உள்ளிட்ட 4 முக்கிய நலத்திட்டங்களில் அவர் கையெழுத்திட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா தனது முதல் கையெழுத்தை இட்டார்.
மேலும் 3 நலத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கி ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார்.
தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சி சென்னை பல்கலை. நூற்றாண்டு விழா அரங்கில் மிக எளிமையாக இனிதே நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், 28 அமைச்சர்களுக்கும், ஆளுநர் ரோசய்யா பதவியேற்பு பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.
விழா நிறைவு பெற்றதும், அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று தனது அலுவல்களை உடனடியாகத் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.