சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனை ஆராய்வதற்காக, அமெ-ரிக்-க விண்வெளி ஆய்வு நிறு-வ-னமான, 'நாசா' அனுப்பிய, 'ஜூனோ' விண்கலம், நேற்று காலை, 9:23 மணிக்கு (இந்திய நேரப்படி) வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
அப்போது, கலிபோர்னியாவில் அமைந்துள்ள,
நாசா திட்ட கட்டுப்பாட்டு துறையின் வர்ணனையாளர், 'ஜூனோவை வியாழனுக்கு வரவேற்கிறோம்' என, உற்சாகமாக கூறினார். இந்த விண்கலம், இந்த கோளின் காலநிலை, புவிஈர்ப்பு, வாயு மண்டலம் ஆகியவற்றை ஆராய்ந்து பூமிக்கு

தகவல்களை அனுப்பும். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். இது, புறக்கோள்கள் வகையைச் சேர்ந்தது. சூரியனில் இருந்து ஐந்தாவது கோளாக உள்ளது.
ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 800 கி.மீ., பரப்பளவு உடையது. இதன் சுற்றளவு பூமியைப் போல, 11 மடங்கு பெரியது. வியாழனுக்கு, 28 துணை கோள்கள் உள்ளன.இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. வாயுக்களின் பிரதிபலிப்பால் தான், பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது. அதிகப்படியான வாயுக்களால், இங்கு கடுமையான ஒரு அழுத்த நிலை காணப்படுகிறது. ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால், பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது.
* வியாழன் தன்னைத் தானே, 9 மணி, 50 நிமிடங்களில் சுற்றி விடுகிறது. இதுவே மிக விரைவாக சுற்றும் கோள்
* சூரியனில் இருந்து, 77.85 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது
* வியாழன் கோள், சூரியனை ஒரு முறை சுற்றி வர, 11.9 ஆண்டுகள் ஆகிறது
* சூரியன், சந்திரன், வெள்ளி ஆகிய கோள்களுக்கு அடுத்து நான்காவது பிரகாசமான கோள்
* 7 அல்லது, 8ம் நுாற்றாண்டில் கண்டறியப்பட்டது. இதற்கு ரோமானிய மன்னர் ஜூபிடரின் பெயர் வைக்கப்பட்டது
* வியாழன் கோளுக்குள், மூன்று பூமியை வைக்கலாம்; அந்தளவுக்கு பெரியது. இதற்கு முன் வியாழன் கோளை ஆராய்ச்சி செய்வதற்கு, பயோனியர் 10, பயோனியர் 11, வாயேஜர் 1, வாயேஜர் 2, கலிலியோ, கேசினி, உலிசெஸ், நியூ ஹாரிசன் ஆகிய எட்டு விண்கலங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதில், 1989ல் அனுப்பப்பட்ட கலிலியோ விண்கலம் மட்டுமே வியாழன் சுற்றுப்பாதையில் தரையிறங்கியது; மற்ற அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.