கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது கல்வி என கருத்து தெரிவித்திருக்கிறார் புதிதாக பதவியேற்றுக் கொண்டுள்ள மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர்.
மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் பிரகாஷ் ஜவடேகருக்கு மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது கல்வி.
கல்வியை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவது போல மாற்றத்துக்கு வித்திடும் காரணியாகவும், அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும் சக்தியாகவும் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் கல்வித் தரத்தை உயர்த்தி அதை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும் என்பதே பிரதமரின் லட்சியம். அதற்கேற்ப கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
பிரதமர் மோடி, மனித வள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் ஆகியோருடன் உரிய ஆலோசனைக்குப் பின்னர் சீர்திருத்தம் தொடர்பான வழிவகைகள் உருவாக்கப்படும்.
ஸ்மிருதி இராணி துறை ரீதியாக மேற்கொண்ட நல்ல திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன். கல்வி வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கிறது, மதிப்பீடு சேர்க்கிறது.
தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை மாணவர் நலன் சார்ந்ததாக அமைய வேண்டும். இந்த புது முயற்சியில் அனைத்துத் தரப்பினர் கருத்தையும் குறிப்பாக நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களின் கருத்தை வரவேற்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.