WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 6, 2016

பாரதியார் பல்கலைக்கழக பிஎச்.டி., எம்.ஃபில். நுழைவுத் தேர்வு: தேர்வு மையங்கள் அறிவிப்பு.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதியார்
பல்கலைக்கழகத்தின் துறைகளிலும், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் (முழு நேரம், பகுதி நேரம்) சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, உடுமலைப்பேட்டை கமலம் கலை, அறிவியல் கல்லூரி, உதகை, ஈரோடு மாவட்டங்களுக்கு ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 4,757 பேருக்கு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு எழுதுபவர்களின் விவரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 16-ஆம் தேதி வரையிலும் அனுமதிக் கடிதம் கிடைக்காதவர்கள் தேர்வு நாளன்று சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று, விண்ணப்பத்தின் நகல், புகைப்படம், இறுதியாக படித்த கல்வி நிறுவனம் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்து அனுமதிக் கடிதத்தைப் பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு 0422-2428318, 90254 68570 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.