Saturday, August 20, 2016
10ம் வகுப்பை தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றாலும் சட்டப்படிப்பில் சேர அனுமதிக்கலாம்.
பத்தாம் வகுப்பை தனித்தேர்வில் எழுதி தேர்ச்சி பெற்றிருந்தாலும், 3 ஆண்டு எல்எல்பி மாணவர் சேர்க்கையில் அனுமதிக்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி, வடக்கு ஆண்டாள் வீதியை சேர்ந்த தாரணி (23), ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 9ம் வகுப்பு வரை பள்ளியில் படித்தேன். மன அழுத்தம் காரணமாக 10ம் வகுப்பை பள்ளியில் படிக்கவில்லை. 2008ல் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றேன். 2016ல் பிஎஸ்சி முடித்தேன். டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் 2016-17க்கான 3 ஆண்டு எல்எல்பி (ஹானர்ஸ்) சேர விண்ணப்பித்தேன். மாணவர் சேர்க்ைகக்கு எஸ்சி பிரிவின் கீழ் 71.318 கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நான், 71.961 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.
இதுகுறித்து பல்கலையில் விசாரித்தேன். 10ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுதியதால் சேர்க்கை அனுமதிக்க முடியாது என்கின்றனர். போதுமான கட்-ஆப் மற்றும் தகுதிகள் உள்ளதால் எல்எல்பி சேர்க்கையில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கணபதி சுப்ரமணியன் ஆஜராகி, ‘திறந்தவெளி பல்கலைக்கழக திட்டத்தின் கீழ் மனுதாரர் படித்ததாக தவறாக முடிவு செய்துள்ளனர். 10ம் வகுப்பு தேர்வை மட்டுமே தனித்தேர்வராக எழுதியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முறையான காலகட்டத்தில் முடித்துள்ளார். எனவே, சட்டக்கல்லூரி சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து, ‘மனுதாரர் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்ணை பெற்றிருக்கும் பட்சத்தில், அவரை சட்டக்கல்லூரியில் ேசர்க்க உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.