மழை காலம் துவங்குவதால், மின் விபத்தை தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. சென்னையில் குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, மற்ற அனைத்து பகுதிகளுக்கும், மின் கம்பம் மூலம், மின்
வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், மழை காலங்களில், காற்று பலமாக வீசும் போது, மின் கம்பம் சாய்வதால், மின் கம்பி கீழே அறுந்து விழுகிறது; கம்பியை மிதிப்பவர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், வரும் அக்டோபர் முதல், வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. அதனால், மின் விபத்தை தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், கடந்த ஆண்டு பெய்த கன மழையால், பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்தன; சில இடங்களில், மின் விபத்துகளும் ஏற்பட்டன. எனவே, மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பள்ளிகளில், மின் விபத்தை தடுப்பது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்காக, பள்ளி கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளது; அவர்கள் ஒப்புதல் கிடைத்ததும், பள்ளிகளில் விழிப்புணர்வு பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.