WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 21, 2016

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.


மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து
தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு: இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால் டிக்கெட்டை' www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.