WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 18, 2016

போதையில் பள்ளிக்கு வந்த 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'.


திருவண்ணாமலையில், போதையில் பள்ளிக்கு வந்த இரு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கருமாரப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று முன்தினம், குடிபோதையில் பணிக்கு வந்த, 
ஆசிரியர் கருணாநிதியை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர். தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணையில், ஆசிரியர்கள் கருணாநிதி, பாண்டியன் இருவரும், போதையில் பள்ளிக்கு வருவது தெரிந்தது. இதையடுத்து இருவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். * துரிஞ்சிக்குப்பம் துவக்க பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி, சுதந்திர தினத்தன்று, காலை, 11:00 மணிக்கு பள்ளிக்கு சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது, தனியாக தேசியக் கொடி ஏற்றினார். இதனால், அவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.