WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 18, 2016

பி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு.


பி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில்,
சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, 3,736 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும், 22ம் தேதி முதல், கவுன்சிலிங் நடக்கிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடக்கும். 23 முதல், 30ம் தேதி வரை, பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கான பட்டியலை, http://www.ladywillingdoniase.com என்ற, லேடி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.