எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வில், 'காலர் மைக்' வைத்திருந்த ஒரு மாணவர் உட்பட, 72 பேருக்கு, மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத, நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத்
தேர்வில், கடந்த ஆண்டு சிலர், 'ப்ளூ டூத்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, காப்பி
அடித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, மே, 1 மற்றும் ஜூலை, 24ல் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதிலும், கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன.இரண்டு கட்ட தேர்வுகளிலும், அடுக்கடுக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஐந்து மாணவியர் உட்பட, 19 பேர், மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நிரந்தர தடை விதித்துள்ளது.கடந்த ஆண்டில், 55 பேர் முறைகேட்டில் சிக்கியதில், 23 பேர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், 72 பேர் முறைகேட்டில் சிக்கி, தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.