WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 18, 2016

அசால்ட்' ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி.


பள்ளி ஆசிரியருக்கு, பெற்றோர் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டையில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்
பள்ளி உள்ளது. இங்கு கணக்கு ஆசிரியராக, காஞ்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகன், 45, பணிபுரிகிறார். இவர் தினமும் பள்ளிக்கு தாமதமாக வருவதுடன், பாடமும் சரியாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, மாணவ, மாணவியரின் பெற்றோர், ஆசிரியர் வேல்முருகனிடம் நேற்று விளக்கம் கேட்டனர். அதற்கு அவர், 'நான் அப்படித்தான் தாமதமாக வருவேன்; என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், வேல்முருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து, ராணிப்பேட்டை போலீசில் வேல்முருகன் புகார் செய்தார். போலீசார், விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.