கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். இதனால், தமிழகத்தில் இந்த சட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடமிருந்து முழுமையாக பெற முடியவில்லை. இதன்படி, 2014 - 15 மற்றும் 2015 - 16ம் நிதி ஆண்டுகளில், 2,179 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியுடன், தமிழக அரசு, 1,019 கோடி ரூபாய் கூடுதலாக சேர்த்து, இதுவரை இலவச கல்வி சட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கி உள்ளது. எனவே, வருங்காலத்தில், மத்திய அரசு நிதியை முழுமையாக பெறும் வகையில், கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, தமிழக நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.