WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 17, 2016

நீட் தேர்வு முடிவு வெளியீடு.


மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆம் கட்ட தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் (நீட்) இன்று வெளியிடப்பட்டன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு மூலம் நிரப்ப, மே 1-இல்
முதல்கட்டமாகவும், ஜூலை 24-இல் தேர்வை 2-ஆம் கட்டமாகவும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.  ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2-ஆம் கட்ட "நீட்' தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் http://cbseresults.nic.in/neet/neet_2016.htm என்ற இணையதளத்தில் இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.