தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அமல்ராஜ் முன்னிலை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் ஜோசப் எட்வர்டு ஜான் வரவேற்றார். கூட்டத்தில், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 6-வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்காக, மாநிலம் தழுவிய தொடர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவ.4-ந் தேதி வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, நவ.20 -ந்தேதி மாவட்ட தலைநகர் திண்டுக்கல்லில் உண்ணாவிரதம் இருப்பது, டிச.28-ல் சென்னையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.