WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 29, 2016

தேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

'தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்க, தேசிய அளவில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, நவ., 1 முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தேர்வுத்துறையின், http://www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், கடந்த ஆண்டு வினாத்தாள்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.