WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 24, 2016

10ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுக்கு, டிச., 26 முதல் விண்ணப்பிக்கலாம். 
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வரும் மார்ச்சில் நடக்கும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும், நேரடி தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், டிச., 26 முதல், ஜன., 1 வரை, மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணமாக, 25 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பம் மற்றும் கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.