Friday, December 23, 2016
வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி.
அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்,
பள்ளியிலேயே, போட்டித் தேர்வு முறைகளை தெரிந்து கொள்ள, பயிற்சி வினாத்தாள் மூலம் சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, வாரந்தோறும், புதிய வினாத்தாள்கள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் வைக்கப்படுகின்றன. போட்டி தேர்வுகள் போல வினாக்களுக்கு, அப்ஜெக்டிவ் என்ற கொள்குறி வகையில் குறிப்புகள் வழங்கப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்ய, மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இத்தேர்வு முறையில், இன்னும் தரமான வினாத்தாள்களை தயாரிக்கவும், மாணவர்கள் புரிந்து, சிந்தித்து, விடைகளை
தேர்வு செய்யும் வகையிலும், வினாத்தாள்கள் தயாரிக்க, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில் நடந்த பயிற்சியில், மைசூரில் உள்ள, இந்திய மொழிகள்
நிறுவனத்தைச் சேர்ந்த, சாம் மோகன்லால், நடராஜ பிள்ளை, பாலகுமார் உட்பட, பல பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.