குரூப் - 4 தேர்வு மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 4ல் அடங்கிய, இளநிலை உதவியாளர். தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. மொத்தம், 12.51 லட்சம் பேர் பங்கேற்றதில், 11.50 லட்சம் பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவை, தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண் அடிப்படையில், பொது தரவரிசை, வகுப்பு வாரியான தரவரிசை, சிறப்புப் பிரிவு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், 'ஆன்லைன்' விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக் கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றில், தகவல் தவறாக இருந்தால், அவர்கள் கவுன்சிலிங் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மார்ச், 20ல் துவங்கும். அதற்கான பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.