Tuesday, February 21, 2017
கற்க கசடற தமிழ் வழியில்..! இன்று உலக தாய் மொழி தினம்.
தாய்மொழி வழிக்கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
முதலில் தாய்மொழி வழிக்கல்வி தேவையா? தேவையற்றதா? என்ற விவாதமே தேவையற்றது. பெற்ற தாய் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி
பிள்ளைகளுக்கு எழுவதே உணர்வுப்பூர்வமானாலும் சரி, அறிவுப்பூர்வமானாலும் சரி நியாயமற்றது. தாய் என்ற உறவும், தாய்மொழியும் ஒரே உயிரைப் பெற்று உள்ள இரண்டு வடிவங்கள்தான்.தமிழ் ஒரு மிகுந்த மேன்மையான பண்படுத்தப்பட்ட மொழி. இம்மொழி நாட்டின் பழம்பெரும் இலக்கிய வளம் உடையது
என்கிறார் வடமொழி ஆய்வாளர் ஜெர்மானிய அறிஞர் மார்க்ஸ்முல்லர். தமிழ்மொழிக்கு இயற்கையிலேயே உள்ள ஈர்ப்பு சக்தியின் காரணமாகதான் அயல்நாட்டு
அறிஞர்களாகிய ஜி.யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், ராபர்ட் டி நொபிலி போன்றவர்கள் தமிழை கற்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் மொழி சீர்த்திருத்தமும், தேன் சுவை சொட்டும் இலக்கி யங்களும் படைத்து பெருமை
அடைந்தனர்.
பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளாக கருதப்படுகிறஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழக்கல்வியே பின்
பற்றப்படுகிறது. 1970களில் இருந்து ஈழத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியை தமிழர்கள் தமிழிலேயே பயில்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா முதலான மாநிலங்களில் மாநில மொழியை கற்காமல் யாரும் மேல்படிப்புக்கு போக முடியாது.
தமிழகத்தில் மட்டுமே தமிழில் அ, ஆ தெரியாதவர்கள்கூட 'முனைவர்' பட்டம் வரை சென்று விட முடியும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் எல்லாம் தமிழ் ஆட்சிமொழி. ஆனால், தாய்வீடான
தமிழகத்தில் தமிழின் நிலை பரிதாபமாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.