WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 28, 2017

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி: மார்ச் 9 முதல் நேர்காணலுக்கு அழைப்பு.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னைக் குழுமத்தின் ஐஐடி, சிஎல்ஆர்ஐ மற்றும் ஐலண்ட் கிரவுண்ட் பள்ளிகளில் (2017-18-ஆம் கல்வி ஆண்டு) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான
நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 9 ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை காலை 8.45 முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பங்குகொள்ளலாம். 09.03.2017 - அன்று விளையாட்டு மற்றும் ஓவியம், கலை, கைவினை, இசை, பாட்டு மற்றும் நடன டேட்டா என்டரி ஆப்ரேட்டர்கள், கணினி இயல் பயிற்றுவிப்பவர்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கே.வி.ஐ லண்ட் கிரவுண்ட் (தீவுத்திடல்) சென்னை - 02. தொலைப்பேசி எண். 044-25360191 10.03.2017 - அன்று யோகா ஆசிரியர்கள், மருத்துவர்கள், முழு நேரம் செவிலியர், ஆலோசகர், பிராந்திய மொழி (தமிழ்) மற்றும் ஜெர்மன் தவிர வெளிநாட்டு மொழி ஆசிரியர்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கே.வி.சி.எல். ஆர்.ஐ., அடையார், சென்னை-20. தொலைப்பேசி எண். 044-24421219 11.03.2017 - அன்று துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி அனைத்து பதிவு ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கே.வி.ஐஐடி கிண்டி, சென்னை-36. தொலைப்பேசி எண். 044-22570907 மேலும் தகுதி, பணி அனுபவம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.