WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 28, 2017

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விடைத்தாள் நகலை நாளைமுதல் பதிவிறக்கம் செய்யலாம்.


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்கள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதியவர்களில்
விடைத்தாள்களின் நகல் கோரி பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை விண்ணப்பித்தோர், அவற்றை scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு எப்போது? இதைத் தொடர்ந்து, மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 6 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை தொடர்புடைய மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம். விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.205 செலுத்த வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும். இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.