WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 28, 2017

2018-19-ஆம் ஆண்டில் பி.எட். புதிய அங்கீகாரம் கிடையாது!


ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு (பி.எட்.) புதிய அங்கீகாரம், இடங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அனுமதி போன்ற நடைமுறைகள் எதுவும் 2018-19-
ஆம் கல்வியாண்டுக்கு கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம், அனுமதி நீட்டிப்பு வழங்குவது, புதிய படிப்புகள்- இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திகொள்ள அனுமதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்.சி.டி.இ. மேற்கண்டவாறு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக என்.சி.டி.இ. உறுப்பினர் செயலர் சஞ்சய் அவஸ்தி வெளியிடப்பட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.