மொழி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வின் போது தமிழ் மொழி பாட தேர்வை எழுதுவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை, கடந்த
2006-ஆம் ஆண்டு ஜூன் 12-இல் கொண்டு வந்தது. இந்த சட்டத்தால், மொழி சிறுபான்மை பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
குறிப்பாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழி மாணவர்களும் பொதுத் தேர்வுகளின் போது, கட்டாயம் தமிழ் மொழி பாடத்தேர்வை எழுத வேண்டிய சூழல் உருவாகியது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த கல்வியாண்டில் (2015-16) பிற மொழி மாணவர்கள் தமிழ் மொழி பாட தேர்வு எழுத விலக்களித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிலும் (2016-17) பொது தேர்வு எழுதும் பிற மொழி மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்கக் கோரி, மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மார்ச் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்வில் மொழிப்பாட பிரிவில், தமிழுக்கு பதிலாக பிற மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களையும், கடந்த ஆண்டை போன்று நிகழாண்டும் அவரவர் தாய்மொழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.
மேலும் பிற மொழி மாணவர்கள் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து, கடந்தாண்டு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றுமாறு தமிழக அரசின் பள்ளிகல்வித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.