WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 26, 2017

கல்லூரி கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் முடிவு.


பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,கல்லுாரி கல்வி இயக்ககத்தை முற்றுகையிடப் போவதாக, அனைத்து பல்கலை
ஆசிரியர்கள் சங்கம்அறிவித்துள்ளது.அனைத்து பல்கலை ஆசிரியர் சங்க, மாநில செயற்குழு கூட்டம், சங்கத் தலைவர், பசுபதி தலைமையில் சென்னையில் நடந்தது. இதில், மார்ச், 7ல், சென்னையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மீனாட்சி கல்லுாரி உட்பட பல கல்லுாரி களில் நிலவும், நீண்ட கால பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர, முத்தரப்பு பேச்சு நடத்த, கமிட்டி அமைக்க வேண்டும். 14 ஆண்டுகளாக அரசு நடத்தி வரும், ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லுாரியை, அரசு கல்லுாரியாக அறிவிக்க வேண்டும். பல்கலை துணைவேந்தர்கள் உரிய காலத்தில், கணக்கு தணிக்கை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசு கல்லுாரிகளில், ஓய்வு பெற்ற முதல்வர்களை, மீண்டும் பணி நீட்டிப்புடன் அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.