WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 26, 2017

சி.பி.எஸ்.இ., புத்தகம் வாங்க கூடுதல் அவகாசம்.


தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை வாங்குவதற்கான கால அவகாசம், பிப்., 28 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், என்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ள புத்தகங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும், என்.சி.இ.ஆர்.டி., நிறுவனத்திடமிருந்து, 'ஆன்லைனில்' புத்தகம் கொள்முதல் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க, பிப்., 22ம் தேதியை கடைசி நாளாக, சி.பி.எஸ்.இ., அறிவித்தது. இந்நிலையில், புத்தகம் கொள்முதல் செய்வதற்கான தேதியை, பிப்., 28க்கு நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.