இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் 66 கல்லூரிகள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி)
அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட பட்டியலில், தலைநகர் தில்லி முதல் இடம் பிடித்துள்ளது. தில்லியில் மட்டும் 66 கல்லூரிகள் போலியானவை என்றும் நாடு முழுவதும் உள்ள 23 போலி பல்கலைக்கழகங்களில், ஏழு பல்கலைக்கழகங்கள் தில்லியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரிகள் பட்டம் சான்றிதழ்களை வழங்கத் தகுதியற்றவை. அந்த நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்கள் போலியானவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் போலி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அடுதடுத்த இடங்களில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் போலியான கல்லூரிகளின் விபரங்களை அறிந்துகொள்ள http://www.ugc.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.