நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தில் திருக்குளில் உள்ள 105 அதிகாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான
மாணவர்களுக்கு கற்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு: திருக்குறளானது தமிழ் மொழிப் பாடத்தில் தேவைக்கேற்ப முதல் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜரத்தினம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்த்திட உத்தரவிட்டது.
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில், திருக்குறளை பாடத் திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆôய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது அறம், பொருட்பாலிலுள்ள 108 அதிகாரங்களில் அடங்கியுள்ள திருக்குறள்களை பாடத்திட்டத்தில் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் ஆலோசனை தெரிவித்தது.
இதனை நடைமுறைப்படுத்த உரிய உத்தரவு வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநரும் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். இயக்குநரின் கருத்துகள் அரசால் ஆலோசிக்கப்பட்டது. 105 அதிகாரங்களை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் என்ற முறையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் வரும் கல்வியாண்டு (2017-2018) முதல் கற்பிக்க அரசு உத்தரவிடுகிறது.
அசைவூட்டப் படங்கள்: திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக் கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள், உலகெங்கும் வாழும் தமிழர்களைச் சென்றடையும் வகையில் இணைய வழி திருக்குறள் வளங்களை அவ்வப்போது நவீன முறையில் உருவாக்கி உடனுக்குடன் பதிப்பித்து
வெளியிட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.