WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 23, 2017

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு ஒரே சீரான தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை மீண்டும் அமல்படுத்துவது என அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், இப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வகையிலான மதிப்பீட்டு முறையைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய நிலையில், இந்தக் கல்வி முறையில் நிலவும் வேறுபாடுகள் காரணமாக மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறும்போது பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக, சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை கொண்டு வரப்படவுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.