பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 30.05.2015 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, மதிப்பெண்ணை dge1.tn.nic.in, dge2.tn.nic.in இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வெழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களின் விவரப் பட்டியலும் வருவாய் மாவட்ட வாரியாக அரசுதேர்வுத்துறையின் இணையதளத்தில் (dge.tn.gov.in) வெளியிடப்படும்'' என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.