WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 29, 2017

பிளஸ் 2 பாடத்திட்டம் வருகிறது புது மாற்றம்.

நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தமிழக பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, இரு மாதங்களில் மாற்ற முடியாது. ஆனால், பாடத்திட்டத்தில் தேவையில்லாத பகுதிகளை அகற்றிவிட்டு, புதிய பகுதிகள் இணைக்க முடியும். அதற்காக, கல்வியாளர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குழுவுடன், ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை சிரமமின்றி மாணவர்கள் எதிர்கொள்ளும் அளவுக்கு, பாடத்திட்டத்தில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 'பள்ளிக்கல்வியின் இந்த அறிவிப்பால், எதிர்காலத்தில், 'நீட்' தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்களும் எழுதி, உயர்கல்வி வாய்ப்புகளை பெற முடியும்' என, பெற்றோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.