நீட்' தேர்வு மையங்களை மாற்றுவதற்கு, வரும், 31 வரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற் றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே, 7ல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில், 88 ஆயிரத்து, 478 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும், 103 நகரங்களில், 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மேலும் ஒரு நகரத்தை, சி.பி.எஸ்.இ., இணைத்துள்ளது. அதனால், தேர்வு மைய நகரத்தை தேர்வு செய்யும் கால அவகாசம், நேற்று முடிய இருந்த நிலையில், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.