WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 1, 2017

போலி பணி ஆணை : ஆசிரியர் 'சஸ்பெண்ட்'.


திருவண்ணாமலையில், போலி பணி ஆணையால், ஆசிரியர் பணிக்கு
சேர்ந்தவர்களுக்கு உடந்தையாக இருந்த, ஒரு ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி பணி நியமன ஆணை கொடுத்து ஆசிரியராக பணிக்கு சேர்ந்தவர்கள் பற்றி விபரம் வெளியானது. இதையடுத்து, மூவர் தலைமறைவாகினர். இதில், இருவர் அக்கா, தங்கை. இவர்களுக்கு உதவியதாக ஆவணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல், இரண்டு நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த, மாதலம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சக்கரை என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இவரையும் சஸ்பெண்ட் செய்து, சி.இ.ஓ., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.