WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 1, 2017

உயிரியலில் 'சென்டம்' கடினம்: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து.


பிளஸ் 2 உயிரியல் தேர்வில் தாவரவியல் பகுதி எளிதாக, விலங்கியல் வினாக்கள் கஷ்டமாக இருந்ததால் சென்டம் பெறுவது சிரமம்,' என, ஆசிரியை ,
மாணவர்கள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: விலங்கியல் கடினம் - நிதிஷ் பரத்வாஜ் (மாணவர், நோபிள் மெட்ரிக் .,மேல்நிலை பள்ளி, விருது நகர்): ஒரு மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. விலங்கியல் பாட பிரிவில் 3 மதிப்பெண்களுக்கான கேள்வி கடினமாக இருந்தது. 5,10 மதிப்பெண் கேள்விகள் சுலபமாக இருந்தது. தாவரவியல் பாட பிரிவில் அனைத்து கேள்விகளுமே சுலபமாக இருந்தது. நுணுக்கமான கேள்விகள் - சி.ராஜலட்சுமி( மாணவி,ஜேசீஸ் மெட்ரிக்., மேல்நிலைபள்ளி, சிவகாசி): ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. விலங்கியலில் மட்டும் 3 மதிப்பெண் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தது. சிந்தித்து விடையளிப்பதாக இருந்தது. புத்தகத்தை ஒரு வரிவிடாமல் படித்திருந்ததால் 10 மதிப்பெண் வினாவிற்கு எளிதாக விடை எழுத முடிந்தது. கேள்விகளும் நுணுக்கமாக கேட்கப்பட்டிருந்ததால், பதிலை மட்டும் படித்து எழுதுபவர்களுக்கு கடினமாக இருந்திருக்கும். தாவரவியல் எளிமை - சாரதா (ஆசிரியை, ஷத்திரிய பெண்கள் மேல்நிலை பள்ளி, விருதுநகர்): தாவரவியல் வினாக்கள் எளிமையாக இருந்தன. விலங்கியலில் சென்டம் பெறுவது சிரமம். மூன்று மதிப்பெண் வினாக்களில் 18, 22, 26 கடினம். வினா உள்ள பாடங்களை தெளிவாக படித்திருந்தால் தான் விடையளிக்க முடியும். ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன, எதிர்பார்த்தது வந்தன. 10 மதிப்பெண் வினாவில் உடற்செயலியல் பாடத்தில் வந்த இரு வினாக்களும் எளிது. இந்த பகுதி 36 வது வினாவில் இருவினாக்களை சேர்த்து கேட்டிருந்ததால் அதிகம் எழுதவேண்டும். பொதுவாக சராசரி மாணவர்கள் மதிப்பெண் பெறுவது கஷ்டம் தான்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.