WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 1, 2017

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) நிகழாண்டில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் மே மாதம் 7-ஆம் தேதி
நடைபெறவிருக்கும் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 1-ஆம் தேதி நிறைவடைந்துவிட்ட நிலையில், மேற்கண்ட கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. முன்னதாக, 25 வயதுக்கு உள்பட்டவர்களே "நீட்' தேர்வில் பங்கேற்க முடியும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் விவரம் வருமாறு: இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், ஒரு அறிக்கை மூலம் நீட் தேர்வுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறையில், நீட் தேர்வுக்கான வயது வரம்பை நிர்ணயிக்க முடியாது என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே, நிகழாண்டுக்கான தேர்வில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்பட வேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள், சிபிஎஸ்இ-யின் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான ஏற்பாட்டை, சிபிஎஸ்இ மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.