WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 26, 2017

10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ.


பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி
வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ உயரதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது. இந்த யோசனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்படும். அதன்பிறகே இதுதொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் விடைத்தாள்கள் திருத்தப்படுவதில் தவறுகள் நேரிடுவதாக சிபிஎஸ்இக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அதுதொடர்பாக ஆய்வு செய்து அப்பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை வழங்குமாறு 2 குழுக்களை சிபிஎஸ்இ அமைத்தது. அந்தக் குழுக்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மார்ச் மாதத்தில் வழக்கம்போல் நடத்தாமல் பிப்ரவரி மாதத்திலேயே நடத்தலாம் என்று பரிந்துரை அளித்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.