தொடர் மழை எதிர்நோக்கப்படும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர்
ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-
தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப் பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்படுவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மழையின் காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்றும், மின்கசிவு, மின்சுற்றுக் கோளாறுகள் ஏதேனும் உள்ளதா என்றும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாள்களில் ஆழமான ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். பள்ளியை விட்டுச் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகில் செல்வதோ கூடாது என அறிவுறுத்த வேண்டும். மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது.
சுவிட்சுகள் மழைநீர் படாத வகையில் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், பள்ளிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளும்போது கண்காணிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.