தமிழகத்தில் நீதிமன்றம் உத்தரவிற்கு பின்பு, 1000 அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை
நிரப்ப கல்வித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதில் இருந்த சில நடைமுறைகளுக்கு எதிராக, சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக, 950க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில் பதவி உயர்வு மூலம், தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் செப்.,ல் சென்னை உயர்நீதி மன்றம் பதவி உயர்வுக்கான இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. அதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இடைக்கால தடையை நீக்கியது. ஆனாலும் தலைமையாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், 'ஏதோ' காரணத்திற்காக இழுத்தடிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க
மாநில தலைவர்
சாமிசத்தியமூர்த்தி கூறுகையில், "நீதிமன்ற இடைக்கால தடையால், ஓராண்டுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது தடை நீங்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் மாணவர் நலன், கற்பித்தல் பணி, தேர்ச்சி சதவிகிதத்தை கவனத்தில்கொண்டு, இம்மாதத்திற்குள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியல் தயாரித்து அனைத்து பணியிடங்களையும் 'கவுன்சிலிங்' மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.