குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வியை தாய்மொழியில்தான் கற்பிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
கிராம மக்கள் வேலை தேடி
நகரங்களுக்குப் புலம் பெயர்வதைத் தடுக்க ஊரகப் பகுதிகளில் அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் அமைந்துள்ள ஸ்வாமி ராம ஹிமாலயன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாநில ஆளுநர் கே.கே.பால், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிறகு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
பட்டப் படிப்பு என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு திறவுகோல் மட்டுமே என்று எண்ணக் கூடாது. மனதில் அறிவொளியை ஏற்றி வைக்கும் உன்னதமான விஷயம் அது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. அதிலும், குறிப்பாக மத்திய அரசின் கனவுத் திட்டங்களை வென்றெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு அவசியமானது. 'திறன் இந்தியா', 'தூய்மை இந்தியா', 'பெண் குழந்தைகளை பேணிக் காப்போம்', 'இந்தியாவில் தயாரிப்போம்' உள்ளிட்ட திட்டங்கள் அவற்றில் முக்கியமானவை.
பொதுவாகவே தொடக்கக் கல்வி என்பது தாய்மொழியில் இருத்தல் அவசியம். அப்போதுதான் சமூகத்தில் அனைவருக்கும் மதிப்பளிக்கும் குணத்தை குழந்தைகளின் ஆழ்மனதில் விதைக்க முடியும். எந்த மொழியைக் கற்றாலும் அதில் தவறேதும் இல்லே. அதேவேளையில் தாய்மொழிக்குத்தான் முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் தாய்மொழிக்கு மட்டும்தான் உணர்வுகளையும், உளச் சிந்தனைகளையும் துல்லியாக வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு. எந்த மொழியைப் பேசினாலும், அதை எந்த வட்டார வழக்கில் பேசினாலும் நாம் அனைவரும் இந்தியர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வேலைவாய்ப்பு தேடி கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் நகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதைத் தடுக்க, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.