
கஜா புயல் காரணமாக நாளை தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
அதுகுறித்த விவரம் இதுதான்:
திருச்சி பாரதிதாசன் பல்கலை. இணைப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் நாளை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திலும் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்தாகியுள்ளன. நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு என வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் டிச.15ல் நடைபெறும். இதேபோல, காரைக்குடி அழகப்பா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த பருவ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் தகுந்த காரணமின்றி நாளை அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.