WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 8, 2018

'நீட்' தேர்வு விண்ணப்பம் .

'மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, நீட் தேர்வு, மே, 5ல் நடக்கிறது. முந்தைய கல்வியாண்டில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வழியாக, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., வழியே தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வில் பங்கேற்போருக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, கடந்த, 1ல் துவங்கியது; 30ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி மாணவர்கள், சிறப்பு பயிற்சி எடுக்கும் நிறுவனங்கள் வழியாக, ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்கின்றனர். சில இடங்களில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில், விண்ணப்ப பதிவுக்கு உதவுமாறு, அரசு பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.