இன்ஜினியரிங் பதவிகளுக்கான தேர்வில், சான்றிதழ் பதிவேற்ற நிலையை தெரிந்து கொள்ளும்படி, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இந்த ஆண்டு, பிப்., 24ல் எழுத்து தேர்வு நடந்தது. விடை திருத்தம் முடிந்து, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 332 பேரும்; இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு, 292 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள், அக்., 4 முதல், 17 வரை, இ - சேவை மையங்களின் வழியே, சான்றிதழ்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறு பதிவேற்றம் செய்தவர்கள், தங்களின் பதிவேற்ற நிலையை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள், 14ம் தேதி வரை, தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து, சந்தேகங்கள் இருப்பின், 044 - -2530 0597 என்ற தொலைபேசி எண்ணில், நவ., 14 வரை, காலை, 10:30 மணி முதல் மாலை, 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.