'இடமாறுதல் கவுன்சிலிங்கை, உடனே நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும், ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங், கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடக்கும். அதற்கான வழிமுறைகள், ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும். இந்த ஆண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பதால், இன்னும் கவுன்சிலிங் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இட மாறுதல் கவுன்சிலிங்கை நடத்தக் கோரி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர், ஆரோக்கியதாஸ், பள்ளி கல்வி துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழக அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளில், பொது மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையை பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.கவுன்சிலிங்கில் மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கு, எந்த செலவினமும், பயணப்படியும், அரசால் வழங்கப்படுவது இல்லை. எனவே, அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடு அரசாணையால், பள்ளி கல்வித்துறை இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்துவதில், எந்த பிரச்னையும் இருக்காது. தமிழக அரசுக்கு, எந்த நிதி இழப்பும் ஏற்படாது.எனவே, கவுன்சிலிங் வழியாக, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களுக்கு நேரடி நியமனம் வழியாக, புதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.