மின் வாரியம், 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமனம் செய்வதற்காக நடத்திய, எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமிக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள், உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வி தகுதியாக, ஐந்தாம் வகுப்பு என, நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் உட்பட, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, 2019 இறுதியில், உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.அதில், தேர்வானவர்களுக்கு, மார்ச், 15ல், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதை, 15 ஆயிரம் பேர் எழுதினர்.
அந்த முடிவுகளை, மின் வாரியம், நேற்று தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், பதிவெண்ணை பதிவு செய்து, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேங்மேன் பதவிக்கான எழுத்து தேர்வில், தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டாலும், அதில், அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், வேலைக்கு தேர்வானவர்களின் விபரம், சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், பின்னர் வெளியிடப்படும்' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.