WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 3, 2020

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை.

'விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு, அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என, கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மே, 27 முதல் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும், 203 மையங்களில், இந்த பணி நடக்கிறது. சேலத்தில் ஒரு மையத்தில், ஆசிரியை ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, தகவல் வெளியானது. ஆனால், பள்ளி கல்வித்துறை, இதை உறுதி செய்யவில்லை.இந்நிலையில், விடைத்தாள் திருத்த மையங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு, லேசான அறிகுறிகள் தென்பட்டாலும், அவர்களையும், மையத்தில் அவருடன் உள்ள மற்றவர்களையும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு, விடை திருத்தும் மைய தலைமை அலுவலர்களை, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும், கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை மையங்களின் முழு விபரங்களை, விடை திருத்த மையங்களில் தயாராக வைத்திருக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.