WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 3, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதம் தள்ளி வைக்க வழக்கு.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர், பக்தவத்சலம் தாக்கல் செய்த மனு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கான மாணவர்கள், தேர்வு மையத்துக்கான ஆசிரியர்கள் என, இந்த பொதுத் தேர்வுக்கான பணியில், 22.43 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள நேரத்தில், பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

இந்த தேர்வின் போது, எவ்வளவு எண்ணிக்கையில் சுகாதார பணியாளர்கள், போலீசார், வாகன ஓட்டுனர்கள் பணியில் இருப்பர் என்பதை, அரசு தெரிவிக்கவில்லை. பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்க அரசு தவறி விட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், ஆசிரியர்கள், மாணவர்கள் பெரும்பாலானோர், சொந்த ஊர் சென்று விட்டனர். அவசரமாக வந்து, தேர்வு எழுதும் மனநிலையில், மாணவர்கள் இருக்க மாட்டார்கள். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களின் பாதுகாப்புக்கு, அரசு உரிய நடைமுறையை ஏற்படுத்தவில்லை.

பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்திருப்பது, சமூக பரவலுக்கு அழைப்பு விடுத்தது போலாகிறது. முறையான பரிசீலனை செய்யாமல், பொதுத்தேர்வு அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க வேண்டும். தேர்வு நடத்துவதற்கு முன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் ஆலோசிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இரண்டு மாதங்களுக்கு பின் அல்லது சுமுக நிலை திரும்பிய பின், மாணவர்களை தயார்படுத்தி, பொதுத் தேர்வு நடத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.