சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, மே, 3ல் நடத்தப்பட இருந்த மொழிப் பாடத்தேர்வு, மே, 31க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2 தேர்வு, மே, 5ல் துவங்க உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதேநேரத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அரசு தேர்வு துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு:பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 3ல் பொதுத்தேர்வு துவங்கி, மே, 21ல் முடியும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே, 2ம் தேதி நடப்பதால், மே, 3ம் தேதி நடத்தப்பட இருந்த மொழிப் பாடத்தேர்வு மட்டும், மே, 31க்கு மாற்றப்படுகிறது.மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடக்கும்.
தேர்வுகள் நடத்தப்படும் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு முறைகள், விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மே, 5ம் தேதி ஆங்கிலப் பாடத்துடன் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. மே, 3ல் நடக்கவிருந்த தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளுக்கான தேர்வு மட்டும், மே, 31ல் நடத்தப்படுகிறது. மற்ற பாடத்தேர்வுகளுக்கான அட்டவணையில் மாற்றமில்லை. தேர்வை கண்காணிக்க4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்பிளஸ் 2 பொதுத்தேர்வை முறையாக நடத்தவும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை கண்காணிக்கவும், சிறப்பு கமிட்டி அமைத்து, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவைகள் கழக மேலாண் இயக்குனர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் லதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நிர்மல்ராஜ், ஒருங்கிணைந்த கல்வி திட்ட கூடுதல் இயக்குனர் அம்ரிதா ஜோதி ஆகியோர் தலைமையில், சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இதில், பள்ளி கல்வியின் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் என, 17 பேரும் இடம் பெறுவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.