சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:கொரோனா அதிகரித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தலாம் என, அதிகாரிகள் அறிவித்திருப்பதும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதும், அதிர்ச்சி அளிக்கிறது.மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை, ஏற்கனவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், மே மாதம் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மார்ச், ஏப்ரலில், கொரோனா பரவல் துவக்க நிலையில் இருந்தது. அப்போது, பல வகுப்புகளுக்கான தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., ரத்து செய்தது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நிலைமை, மிகவும் மோசமாக உள்ளது.இந்நிலையில், பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டால், கண்டிப்பாக மாணவர்களுக்கு கொரோனா தொற்றும். இது, மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றும், கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வுக்கு முந்தைய தேர்வுகள், மிக சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன.
தமிழகத்திலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இதேபோன்ற தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, மாநில பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்து, அதற்கு முந்தைய தேர்வுகளில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக, அறிவிக்க வேண்டும்.ஒருவேளை, பொதுத் தேர்வுகளை, நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், 'ஆன்லைன்' முறையில், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.