WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 8, 2014

தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது

ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை  அமல்படுத்தக்கோரி
சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த  பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.  தஞ்சையில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர  ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர்  சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.  வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு  முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை  நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன. இதனால் பல  ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர்  பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் பயிற்சியை  பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே பல  பள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம்  பாதிப்புக்குள்ளாகிள்ளது. இதை முதல் வர் பரிசீலனை செய்து யாருக்கும்  பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில் பதிவுமூப்பு  முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில்  நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள 6,000 பட்டதாரி  ஆசிரியர்களுக்கும், 2012ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி சான்றிதழ்  சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக நிலுவையில் உள்ள  700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில்  உண்ணாவிரத போராட்டம் நடத்தப் படும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3 comments:

  1. தொடர் போராட்டமா..?

    ReplyDelete
  2. Court case ennachu? Yaravathu sollungalen en heart beat 100 pokum pola eruku

    ReplyDelete
  3. i have attended cv in 2010 and now passed in tet by getting 95 marks history unselected my dob 31/07/1962

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.