WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 31, 2016

தமிழகத்தில் மேலும் புது இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வாய்ப்பு: அங்கீகார விதிமுறைகள் தளர்வால் ஆர்வம் அதிகரிப்பு.


மாநகரில், 1.5 ஏக்கர் இடம் இருந்தாலே இன்ஜினியரிங் கல்லுாரிகள் துவங்கலாம்' என, அகில இந்திய கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., இன்ஜி.,
கல்லுாரிகளுக்கான விதிமுறையை தளர்த்தியுள்ளது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என, பல கருத்துகள் எழுந்துள்ளன. புதிய விதிமுறைகளால் நகருக்குள்ளேயே பல புது கல்லுாரிகள் துவங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்ஜி., கல்லுாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கப்படும். இதன்பின், தமிழகத்தில் அண்ணா பல்கலை சார்பில் இணைப்பு தரப்படும். இந்த ஆண்டு அங்கீகாரம் தருவதற்கான விதிமுறைகளை, ஏ.ஐ.சி.டி.இ., தளர்த்தியுள்ளது. அதன்படி, 

● மாநகரில் ஏற்கனவே, 2.5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, 1.5 ஏக்கர் நிலம் இருந்தாலே, இன்ஜி., கல்லுாரிக்கு அங்கீகாரம் தரப்படும். நகரத்துக்கு, 2.5 ஏக்கர்; கிராமங்களுக்கு, 7.5 ஏக்கர் என இடத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

 ● அதேபோல், 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தை, 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் இருக்கலாம் என, மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏராளமான இன்ஜினியரிங் கல்லுாரிகள் இருந்தாலும், பெரும்பாலான கல்லுாரிகள் ஊருக்கு வெளியே வெகு தொலைவில் உள்ளன. மாணவர்கள் தினமும் கல்லுாரிகளுக்கு சென்று வர பல மணி நேரம் செலவாகிறது. நகருக்குள் பெரிய இடங்களில் பல ஆண்டுகளாக பெரிய பள்ளிகள், கலை கல்லுாரிகள் உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., புது விதிமுறைகளால் அந்த இடங்களில் இன்ஜினியரிங் கல்லுாரிகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனை தளர்வுக்கு கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.