WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 23, 2016

செட் தகுதித்தேர்வில் தேர்வர்கள் வினாத்தாள் எடுத்து வர தடை.


உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், செட் தகுதித்தேர்வில் வினாத்தாள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டதால், தேர்வர்கள் பெரும்
அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது. மொத்தம் மூன்று தாள்கள் அடங்கிய தேர்வு, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, மூன்று கட்டங்களாக நடந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் இருந்தன. ப்ளூ பிரின்ட் படி, கேள்விகள் இடம்பெறவில்லை. நான்கு வகை வினாத்தாளுக்கு பதில், ஒரே வினாத்தாளே வழங்கப்பட்டது. தேர்வு அறைக்குள் பறக்கும் படை அமைக்கப்படவில்லை. நெட் தேர்வை போல், செட் தேர்விலும் விடைத்தாள் நகல் வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது; இதுகுறித்து தேர்வு மையத்தில் எந்த அறிவிப்பும் இல்லை; தேர்வு முடிந்ததும் விடைத்தாளுடன் வினாத்தாளையும் எடுத்துச் சென்றதால், தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு, தேர்வை அவசரமாக அறிவித்து நடத்தியதால், தேர்வு நடைபெறுவதில் சில குழப்பங்கள் நிலவியது. இவ்வித பிரச்னைகளை பல்கலை அதிகாரிகள் தற்போதே முன்னெச்சரிக்கையுடன் சரி செய்ய வேண்டும் என்று நெட், செட் தேர்வர்கள் சங்க ஆலோசகர் கூறியுள்ளனர்.

1 comment:

  1. தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யாவிட்டால்: பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் எச்சரிக்கை
    ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அடுத்தக் கட்டமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்துவோம் என்று பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    More details


    http://m.dinakaran.com/Detail.asp?Nid=197726

    www.jobs-edn.blogspot.com

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.